செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

சென்னை மாநகராட்சி எடுத்துள்ள சீரிய நடவடிக்கையால், தண்ணீர் தேங்கும் பகுதிகள் 3 ஆயிரத்தில் இருந்து 19ஆக குறைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின் ஆகியோரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடகிழக்கு பருவமழை காலத்தில், கனமழையால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணி விரைவாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழைப்பொழிவு அதிகமாக பதிவாகியுள்ளதாக கூறிய அமைச்சர், அம்மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தால், தற்போது அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தமிழக அரசு திறம்பட எதிர்கொண்டு வரும் நிலையில், மக்களுக்கு அச்சமுட்டும் வகையில், சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version