இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்ததையடுத்து, ஆலைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. கொரோனா இரண்டாவது அலையின் கோரத்தாண்டத்தால், ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 31 வரை 3 மாத காலத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்ததால், ஆலைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version