அதி தீவிர புயலாக மாறும் ‘நிவர்’!

நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல், மாமல்லபுரம், காரைக்கால் இடையே நாளை மாலை கரையை கடக்கிறது. இந்த நிலையில், சென்னையிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிவர் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும், தற்போது மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version