18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என, டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை எனக் கூறினார்.
20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தகுதி நீக்க வழக்கில் தினகரன் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், கால தாமதம் மற்றும் பயம் காரணமாக மேல்முறையீடு செய்வதில் இருந்து அவர் பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.