இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மிக மோசமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் டொனால்ட்டு டிரம்ப் பேசினார். அப்போது அவர் இந்தியாவில் புல்வாமா பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவு மிக மோசமாகவும், ஆபத்தாகவும் உள்ளதாகத்தெரிவித்தார். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த 1.3 பில்லியன் டாலர் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு தீவிரவாத ஒழிப்புக்கு ஒத்துழைக்காததால், அந்நாட்டிற்கு அளித்து வந்த நிதியை நிறுத்தியுள்ளதாகவும், இருநாடுகளுக்கு இடையேயும் பகைமை நீங்கவேண்டுமெனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.