பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும், ஆட்டுச் சந்தையில் 5 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் ஆட்டுச்சந்தை தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளின் விலை, 5 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன. கடந்தாண்டை காட்டிலும், வாகனங்களின் வாடகை அதிகம் உள்ளதால், போதுமான அளவுக்க லாபம் கிடைக்கவில்லை என வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.