அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் வசித்த வடிவேல், அதிமுகவில் 38 வது வார்டு கழக செயலாளராக இருந்து வந்தார். இவர் கரூர் நகரிலிருந்து ராயனூரில் உள்ள தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருமாநிலையூர் அருகில் சென்று கொண்டிருந்த அவரை 3 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த வடிவேலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி வடிவேல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடியா ஆட்சியில் தினந்தோறும் அரங்கேறும் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிவருவதாக குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், கொலையாளிகளை உடனடியாக கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version