தனியார் நிதி நிறுவன காசாளர் படுகொலை

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக நிதி நிறுவன காசாளர் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த சின்ன குடிகொண்டா கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அப்பு என்பவருக்கும் கோவில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் அரக்கோணம் சோளிங்கர் சாலையில் வினோத் நடந்து செல்லும் போது தண்ணீர் டேங்கர் டிராக்டரை ஓட்டிச் சென்ற அப்பு, வினோத் மீது மோதியதாக கூறப்படுகிறது.இச்சம்பவத்தில் வினோத் பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த போலீசார் வினோத்தின் சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அப்புவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version