பிரதமர் மோடி மற்றும் முக்கிய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து இந்தியாவில் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை குறிவைத்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு, 8 முதல் 10 பேர் கொண்ட சிறப்பு தற்கொலைப் படையை தயார் செய்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த சம்ஷேர்வானி தனது கூட்டாளிகளுக்கு எழுதிய கடிதம் மூலம் இந்த திட்டம் அம்பலமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், செப்டம்பர் இறுதிக்குள் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், பதன்கோட் உள்ளிட்ட 4 முக்கிய விமானப்படை தளங்களை தாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீநகர், அவந்திபோரா, ஜம்மு, பதான்கோட், ஹிண்டன் விமானப்படை தளங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.