திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் !

திருச்சி விமான நிலையத்தில் சுமார் 31 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணிகளிடம், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆண் பயணியின் லக்கேஜ்களை சோதனை செய்தபோது, டேப், செல்போன்களில், 360 கிராம் எடையில் 12 தங்க தகடுகள், 179 கிராமில் தங்க செயின் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்திய நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version