நியூசிலாந்தில் கனமழை வெள்ளத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையால் அந்நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆக்லாந்து விமான நிலையம் சுற்றிலும் வெள்ளம் தேங்கி காணப்படுவதால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். சில பயணிகள் விமான நிலையத்திற்கு நீச்சல் அடித்து வந்து சேர்ந்தனர்.மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

Exit mobile version