சென்னை கனமழையால் ஏழு ரயில்கள் சேவை மாற்றம்!

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏழு ரயில்கள் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. முக்கியமாக,  சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படக்கூடிய ரயில் திருவள்ளூர் மார்க்கத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் இடையே பாலம் எண் 14-இல் மழைநீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வியாசர்பாடி, ஜீவா நகர், பேசின் பிரிட்ஜ் ,வால் டாக்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ளது அதனைத் தொடர்ந்து தண்டவாள பகுதிகளிலும் முழங்கால் அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால் தொடர்ந்து ரயில்கள் இயக்க முடியவில்லை என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுவதாகவும், அதேபோன்று கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆவடியில் இருந்து புறப்படும் என தென்னகர் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் ஏழு விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று தளத்திலிருந்து இயக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து இடைவிடாது மழை நீடித்தால் அனைத்து ரயில்களும் மாற்று சேவை மார்க்கமாக இயக்கப்படும் என தென்னைக்க ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி பேசன் பிரிட்ஜ் இடையே தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்துவதற்கு ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version