நியூசிலாந்து 1 ரன்னில் அபார வெற்றி.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக்கொண்ட இங்கிலாந்து அணி!

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 435 ரன்கள் எடுத்திருந்தது. பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஆட்டமிழந்தது. பிறகு இங்கிலாந்து அணியினர், நியூசிலாந்து அணியினருக்கு பாலோ ஆன் முறையை விதித்தனர். அதன்படி மீண்டும் பேட்டிங் செய்ய நியூசிலாந்து அணியினர் பணிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிக சிறப்பாக விளையாடினர்.  டாம் லதாம் 83 ரன்களும், டெவான் கான்வாய் 61 ரன்களும் எடுத்திருந்தனர். பிறகு களமிறங்கிய கேன் வில்லியம்சன் தன்னுடைய இயலபான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 26வது சதத்தை அடித்தார். 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற டிரைல் மிட்சல் 54 ரன்களும், டாம் ப்ளெண்டல் 90 ரன்களும் சேர்த்து இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். இன்னிங்கஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 483 ரன்கள் சேர்த்திருந்தனர்.New Zealand vs England, 1st Test Dream11 Prediction: Best picks for NZ vs  ENG today

பிறகு 258 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. 48 ரன்களில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்த இங்கிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது. ஒரு பந்தைக் கூட அணுகாமல் ஹேரி ப்ரூக் ரன் அவுட் ஆனார். ஜோ ரூட் மட்டும் களத்தில் தனித்து விளங்கி 95 ரன்கள் எடுத்திருந்தார். அவர் அவுட் ஆகியிருந்தாலும் இங்கிலாந்திற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் பத்தாவது விக்கெட்டிற்கு விளையாடிய லீச் 31 பந்துகள் எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே சேர்த்திருந்தார். அவர் அடித்து ஆட எண்ணவில்லை. ப்ரண்டன் மெக்கலத்தை கோச்சாக வைத்துக்கொண்டு அதிரடியாக ஆட மறுக்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பி உள்ளார்கள். ஆட்டத்தின் முடிவில் ஜெயிக்க 2 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ரன் அடித்திருந்தால் டிரா ஆக்கியிருக்கலாம். ஆனால் இறுதி விக்கெட்டாக வாக்னர் பந்தில் ஆண்டர்சன் ஸ்டோக் வைக்க எண்ணி பேட்டில் எட்ஜ் வாங்கி ப்ளண்டலிடம் கேட்ச் ஆனார்.

இங்கிலாந்து இந்த மேட்ச்சை வென்றிருந்தால், தொடர்ந்து ஐந்து தொடர்களை 108 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றதாக வரலாறு ஆகியிருக்கும். தேவையில்லாமல் பாலோ ஆன் கொடுத்து மாட்டிக்கொண்டு தற்போது தோற்றுவிட்டார்கள். மாறாக, நியூசிலாந்து அணியினர் வரலாறு படைத்துவிட்டார்கள். நியூசிலாந்து அணியினர் பாலோ ஆன் வாங்கிய பிறகு ஜெயிக்கும் நான்காவது அணியாகும். மேலும் 1 ரன்னில் வெற்றி பெறும் இரண்டாவது அணியாகும். தொடர் நாயகன் விருதினை இங்கிலாந்தின் ஹேரி ப்ரூக்கும், ஆட்ட நாயகன் விருதினை கேன் வில்லியம்சனும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தொடரை சமன்செய்து கோப்பையைப் பகிர்ந்துகொண்டனர்.

Exit mobile version