திருப்பத்தூர் அருகே தானிப்பட்டியில் உள்ள சின்னகருப்பன், பெரியகருப்பன் கோயிலில் நள்ளிரவில் நடைபெற்ற பூஜையில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
நள்ளிரவு பூஜை என்றாலே பலருக்கும் ஒரு அச்சம் உள்ளது. நரபலி பூஜையோ, மந்திரவாதி பூஜையோ என அச்சம் கொள்வதும் உண்டு. ஆனால், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தானிப்பட்டியில் உள்ள காவல் தெய்வமான சின்னகருப்பன், பெரியகருப்பன் கோயிலில் நள்ளிரவில் விநோத திருவிழா நடைபெற்றது. சிவராத்திரி திருவிழாவின் எட்டாம் நாளான, எட்டுக்கு படைத்தல் நிகழ்ச்சியில், கிடாய் வெட்டி பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆண்களுக்கு வாழை மட்டையில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி பனை ஓலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்ததாகவும், பனையின் அழிவின் காரணமாக வாழை மட்டையில் வழங்கப்பட்டதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.