கிராம உதவியாளர் பணிகளில் பணி நியமனம் செய்ய தாமதம்

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட நான்கு வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 31 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டு நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. பிற மாவட்டங்களில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்று பணி நியமனமும் முடிந்துள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் பணி நியமனம் செய்யாமல் தாமதமாக்கி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் கேட்டபோது, ஆளும் திமுகவினர் சொல்பவர்களைதான், பணி நியமனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பணிநியமனம் எட்டாக்கனியாகவே இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version