அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் சிசு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் விஜய்யின் கர்ப்பிணி மனைவி பாக்கியலட்சுமி, ரெட்டிதோப்பு பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் வழிகாட்டுதலில் கர்ப்பகால சிகிச்சைகளை பெற்று வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, சிகிச்சை பெற சென்ற போது பணியில் இருந்த மருத்துவர் அன்பரசன், சிசுவுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி வயிற்றில் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பிற்பகலில் திடீரென உடல்நலம் மோசம் அடைந்த பாக்கியலட்சுமியை, ஆம்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் இருந்த சிசு இறந்து பல நாட்கள் ஆகியிருப்பது தெரியவந்து, அறுவை சிகிச்சை செய்து சிசுவை வெளியில் எடுத்துள்ளனர்.

வயிற்றில் சிசு இறந்ததைக் கூட அறியாமல் அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்து வந்ததால் ஆத்திரம் அடைந்த பாக்கியலட்சுமியின் கணவர் மற்றும் உறவினர்கள் இறந்த சிசுவை கையில் வைத்துக்கொண்டு, ரெட்டித்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இரவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Exit mobile version