தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?

ஒரு பக்கம் சந்திரயான் – 3ன் வெற்றிக் கொண்டாட்டத்தில் நாம் அனைவரும் களிப்போடும் உவகையோடும் இருக்க மறுபுறம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு பட்டியலில் தமிழநாடு முதல் இடத்தில் உள்ளது. இதனைப் பற்றி தற்போது விரிவாக காண்போம்.

கழிவுநீர் கால்வாய் மரணங்கள்..!

“இந்தியாவில் கழிவுநீர் கால்வாயில் இறங்கி உயிரிழப்போர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தியாக உள்ளது. சமூகநீதியை தன் கொள்கையில் முதன்மையாக வைத்துள்ள விடியா திமுக அரசு இதனை கருத்தில்கூட கொள்ளவில்லை என்பதுதான் பொதுமக்களுக்கு உச்சபட்ச வேதனை. இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் இருப்பதற்கு மாநில அளவில் தூய்மைப் பணியாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தெசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கூறியுள்ளார்.

துரித நடவடிக்கை எடுக்குமா திமுக?

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நேற்று, தூய்மைப் பணியாளர் நலனுக்கான நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு துறை செயலர்களுடன் ஆணையத் தலைவர் வெங்கடேசன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் உயிரிழப்போர் எண்ணிக்கை நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என்று கூறினார். மேலும் பேசிய அவர், கடந்த 1993 முதல் இதுவரை 225 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதைக் கட்டுப்படுத்த மாநில அளவில் கண்காணிப்பு குழுவும், தூய்மைப் பணியாளர் நல வாரியமும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். தூய்மை பணியாளர்களில், ஒப்பந்ததாரர் முறையை ரத்து செய்து, அனைவருக்கு ஒரே விதமான ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர தூய்மைப் பணியாளர்களுக்கு, மாத சம்பளமாக 1500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு வசதியும் செய்துதர வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்த, தற்போது 770 இயந்திரங்கள் போதவில்லை என்பதால் 300 இயந்திரங்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.

எனவே இனியும் இந்த விடியா அரசு காலம் தாழ்த்தாமல் தூய்மைப் பணியாளர்களுக்கு உகந்த நடவடிக்கையினை விரைவில் எடுக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version