"சர்கார்" படத்தினால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய அடி?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள “சர்கார்” திரைப்படம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் இணைந்துள்ள படம் சர்கார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாப்பாத்திரத்தில் ராதாரவி மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளை கடந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இந்தநிலையில், படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம், இப்படத்திற்காக விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு பெரிய அளவில் சம்பள தொகை வழங்கியுள்ளனர். மேலும், படத்தின் பொருட் செலவுகளும் அதிகளவில் செலவழித்துள்ளனர்.

“சர்கார்” படம் முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தாததால், இதன்மூலம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எதிர்பார்க்காத அளவில் நஷ்டம் அடைவார்கள் என தெரியவருகிறது.

Exit mobile version