மறு தணிக்கைக்கு செல்கிறது 'சர்கார்' திரைப்படம்

‘சர்காரில்’ சர்ச்சைக்குரிய, அவதூறு காட்சிகளை நீக்க சம்மதித்த தயாரிப்பு தரப்பு, மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு திரைப்படம் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தணிக்கை குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஒப்புதல் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக படத்தில் வரலட்சுமி சரத்குமாரின் பெயர் உச்சரிக்கப்படும் காட்சிகள் மியூட் செய்யப்படும் என தெரிகிறது.

மறு தணிக்கை தொடர்பாக, தயாரிப்பாளர் தரப்பு மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வார்கள் என்றும் விஜய் மற்றும் முருகதாசிடம் இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version