இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சர்கார் படத்தில் தமிழக அரசையும், இலவச திட்டங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ், ஏ.ஆர்.முருகதாஸ் மீது, காவல்துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை 6 வார காலத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் ஒத்தி வைத்தார்.

Exit mobile version