பெரிய ஹீரோக்கள் கைவிட்ட படங்கள்…

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் சில படங்கள் எடுக்க முடியாமல் போனது. அப்படிப்பட்ட படங்களின் வரிசை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்…

ரஜினிகாந்த்தின் – ‘ஜக்குபாய்’

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிக்கு ரெடி பண்ண படம் தான் ஜக்குபாய். படத்திற்கு போட்டோ ஷூட் எல்லாம் முடிந்த பிறகும், படம் எடுக்க முடியாமல் போனது. படத்தின் கதை பாட்ஷா படம் போல் இருக்கு என சிலர் சொன்னதால் ரஜினிகாந்த் இந்த படத்தை கைவிட்டதாக தெரிகிறது. ஆனால், சரத்குமார் வைத்து ஜக்குபாய் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

கமல்ஹாசனின் – ‘மருதநாயகம்’

கமல்ஹாசனின் கனவு படம் ‘மருதநாயகம்’. இங்கிலாந்து எலிசபெத் ராணி தொடங்கி வைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு போதிய பட்ஜெட் இல்லாமல் நின்று போனது. 2 வருடங்களுக்கு முன்பு கூட கமல் இந்த படத்தை எடுக்க முயன்றார், ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

விஜய்யின் – ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’, புலி(எஸ்.ஜே.சூர்யா)

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்க இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று படம், போட்டோ ஷூட் – டுடன் நின்று போனது. படம் வெளிவந்திருந்தால் அத்தியாயம் 2, அத்தியாயம் 3 என வர வாய்ப்புகள் இருந்ததாக தெரிகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கூட்டணி, விரைவில் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா விஜய்க்கு செய்த ஸ்கிரிப்ட் தான் ‘புலி’, ஆனால் சில காரணங்களால் படம் எடுக்க முடியாமல் போனது. அதே கதையை தெலுங்கில் பவன் கல்யாண் வைத்து எடுத்தார் எஸ்.ஜே.சூர்யா.

அஜீத்தின் – ‘மிரட்டல் ‘, ‘ரன்’, ‘ஜெமினி’, ‘நந்தா’, ‘நான் கடவுள்’

அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் பல படங்கள் பாதியிலேயே நின்று போனது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருந்த படம் தான் ‘மிரட்டல்’, ஆனால் படம் போட்டோ ஷூட்டுடன் நின்று போனது, அதே கதையை சூர்யா வைத்து ‘கஜினி’ படத்தை இயக்கினார் முருகதாஸ், படமும் சூப்பர் ஹிட்டானது. லிங்குசாமி இயக்கத்தில் அஜீத் நடிக்க இருந்த படம் தான் ‘ரன்’, ஆனால் ட்ராப் ஆனது. அதே பாலாவின் நந்தா, நான் கடவுள் படமும் சில பிரச்சனைகளால் நின்று போனது.

1.தனுஷ்-கே.எஸ்.ரவிக்குமார் (ஓடி போகலாமா)
2.தனுஷ்-செல்வராகவன் (மாலை நேரத்து மயக்கம்)
3.சிம்பு-எஸ்.ஜே.சூர்யா (AC)
4.சிம்பு-செல்வராகவன் (கான்)
5.கமல்-ஷங்கர் (ரோபோ)

இப்படி நிறைய படங்கள் எடுக்க முடியாமல் போனது உண்டு…

Exit mobile version