இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமான காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசியல் குறித்து தவறான விமர்சனங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய கோரி சமூக ஆர்வலகர்கள் தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு போலீசார் வந்ததாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் அதை மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இன்று பிற்பகல் இம்மனு விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version