சர்கார் படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்கள் கைது

சர்கார் படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு, இரண்டு இளைஞர்கள் அரிவாளுடன் அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், வீடியோ வெளியிட்ட இளைஞர்களை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் வீடியோவில் நடித்தவர்கள் எண்ணூரை சேர்ந்த சஞ்சய் மற்றும் லிங்கதுரை என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் வீடியோவை எடுத்தவர் வடபழனியை சேர்ந்த அனிஷேக் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் இளைஞர்கள பயன்படுத்திய அரிவாள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீடியோ பதிவு தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version