தமிழகம் முழுவதும் மொத்தம் சுமார் 89 கோடியே 29 லட்சம் மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். குறிப்பாக தேனி மாவட்டத்தில் 46 காவலர் குடியிருப்புகள் மற்றும் மாவட்ட சிறைச்சாலையையும், அரியலூரில் 100 காவலர் குடியிருப்புகள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 294 காவலர் குடியிருப்புகளையும், கடலூர், கோவை, ராமநாதபுரம் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் காவல் நிலையங்களையும் , முதுகுளத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் 2 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களையும், முதலலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதன்மூலம் 89 கோடியே 29 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
Discussion about this post