இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட விடுமுறைக்கு பின்னர் கடும் பாதுகாப்புடன் பள்ளிக்கூடங்கள் இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கின.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தின்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தாக்குதல் காரணமாக இலங்கையில் அசாதாரண நிலை நிலவி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இந்நிலையில், இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகள் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.
பள்ளிக்கூடங்களின் நுழைவாயிலில், போலீஸ், சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், ராணுவத்தினர் இணைந்து கடும் சோதனைக்கு பின்னரே மாணவர்களை உள்ளே அனுமதித்தனர். பள்ளிக்கூடங்களில் சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.