இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானது – சிபிசிஐடி

கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானது என தெரியவந்துள்ளது.

இலங்கை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் உயிரிழந்தார். இதனையடுத்து, அங்கொட லொக்காவிற்கு உதவியதாக அவரது காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கை தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில், உயிரிழந்த அங்கொட லொக்காவின் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட உடல் உள்ளுறுப்புகள் ரசாய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகளில், அவரது உடலில் விஷம் எதுவும் இல்லை என்றும், அவரது மரணம் இயற்கையானது தான் என்றும் தெரியவந்துள்ளது.

Exit mobile version