பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டணை வழங்க வேண்டும்

இலங்கையில் பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அதிகபட்ச தண்டணை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழு முன்பு, இலங்கை முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சாட்சியளித்தார். அப்போது பேசிய அவர், மற்ற மதத்தவர்களைக் கொலை செய்யுமாறும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துமாறும், இஸ்லாம் மதத்தில் கூறப்படவில்லை என்று கூறினார். அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்களை, இஸ்லாமியர்களாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்று தெரிவித்த அவர், பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அதிகபட்ச தண்டணை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Exit mobile version