எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக சிறப்பு நாணயம் வெளியீடு

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவாக அவரின் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். அதனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

Exit mobile version