இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான போட்டியில், இந்தியாவுக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா அணி.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வரும் இந்தியா-தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹசிம் அம்லாவும், குயிண்டன் டி காக்கும் பும்ரா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினர். பின்னர் டூஸ்ஸனையும், கேப்டன் டு பிளஸிஸ்ஸையும் சஹால் போல்ட் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய டுமினி 3 ரன்களில் குல்தீப் யாதவின் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து டேவிட் மில்லரும், ஃபெலுக்வாயோவும் சஹாலின் பந்தில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் 42 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் அவுட்டானார். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ரன்களை எடுத்தது.