பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சென்னையில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள 7 மண்டலங்களில், 92 வார்டுகளில், 8 ஆண்டு காலத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், 16,621 தெருக்கள் பயனடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.