தூய்மைபணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த எஸ்.பி.வேலுமணி

 கோவை தொண்டாமுத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சியில் உள்ள கரடிமடை, மத்திப்பாளையம், சென்னனூர் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அப்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளையும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மாதம்பட்டி சக்திவேல், தொண்டாமுத்தூர் டிபி வேலுச்சாமி, பேரூர் ராமமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பிரதீப் மற்றும் முக்கிய நிர்வாகிகள்
தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Exit mobile version