மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானிடம் மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் கடந்த 2000ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

அந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் நிகழ்ச்சி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடாக ஏர் ஆர்.ரஹமான் தரவேண்டும் என்று க சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன் மனுவில்,இசை நிகழ்ச்சிய தனக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில், இசை நிகழ்ச்சியின் காப்புரிமையை தனியார் இசை நிறுவனங்களுக்கு விற்று ஏ.ஆர்.ரஹமான் லாபம் அடைந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை ம நீதிபதி ஆர்.சுப்ரமணியம் முன்பு நடைபெற்று வந்தது.

ஏ.ஆர்.ரகுமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதாசம்பத், நிகழ்ச்சி நடத்தியதால் நஷ்டம் ஏற்பட்டதற்கு தான் பொறுப்பாக முடியாதென்றும் ,
நிகழ்ச்சிக்காக பேசிய தொகையைக்கூட மனுதாரர் தராமல், போலியாக இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version