ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.

கோவையில் சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், அரசு மருத்துவமனைகளுக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார். அதேபோல, மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், நோய்த்தடுப்பு உபகரணங்களையும் வழங்கினார். நோயாளிகள், உடன் இருப்பவர்கள் அனைவருக்கும் மதிய உணவு, முகக்கவசம், கபசுரக் குடிநீர் ஆகியவையும் வழங்கப்பட்டது.

Exit mobile version