கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, பெண் ஒருவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் வருணா தொகுதிக்கு சென்ற சித்தராமையா, அங்கு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் குரலை உயர்த்தி, சித்தராமையாவிடம் பேசியதால், ஆத்திரமடைந்த அவர், எழுந்து நின்று, அந்த பெண்ணை நாற்காலியில் அமருமாறு கட்டளையிட்டார்.
தொடர்ந்து அந்த பெண், ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சித்தராமையா, அந்த பெண்ணிடம் இருந்த மைக்கை பிடுங்கினார். அப்போது, அந்த பெண்ணின் துப்பட்டாவும், வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த பெண்ணையும், சித்தராமையாவையும் காங்கிரஸ் கட்சியினர் சமாதானம் செய்தனர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருவதால், சித்தராமையாவிற்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.