காவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு – தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. பாதுகாப்பு கருதி, கபினி அணையில் இருந்து 35,000 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 37,000 கன அடியும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பிலிகுண்டுலுவிலுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தொடர்மழை காரணமாக தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version