சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை

திண்டுக்கல் வடமதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த வழக்கில் 12ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

ஜி.குரும்பபட்டியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் வாயில் மின் வயரை கடித்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கீறல்களும், ரத்த காயமும் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்தது அதேபகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Exit mobile version