செல்லூர் ராஜுவின் திண்ணைப் பிரச்சாரம்.. விண்ணை முட்டும் அதிமுக.. மண்ணை கவ்வும் திமுக

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி பிரச்சார களம் சூடுபிடிக்கிறது. அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னர்சுவினை ஆதரித்து கழகத்தின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் பொதுமக்களிடம் விடியா திமுக மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகள் கூறி அரசுகட்டிலில் அமர்ந்ததைப் பற்றி பேசினார்.

திண்ணைப் பிரச்சாரம் நாங்கள் செய்யக் காரணம் ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை கதைதான். ஆயிரம் ரூபாய் கொடுத்து கூட்டம் கூட்ட எங்களுக்கு சக்தியில்லை. அதனால் திண்ணைப் பிரச்சாரம் மூலம் தாய்மார்களை கூப்பிட்டு 21 மாத ஆட்சிகாலத்தில் இந்த விடியா அரசு என்ன செய்தது என்பதினை நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர்கள் திமுக எங்களுக்கு எந்தவித நலத்திட்டங்களை செய்யவில்லை என்று கூறினார்கள். விடியா அரசின் அமைச்சர்கள் போல ஓடிஓடி போட்டோவிற்கு போஸ் கொடுக்க எங்களால் முடியாது. இங்கு காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். ஆனால் வேலைப் பார்ப்பவர்கள் எல்லாம் திமுக அமைச்சர்கள். மடியில் கணம் இருந்தால்தான் மனதில் பயம் இருக்கும். எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை. நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது சிறப்பாக செயல்பட்டோம். எங்கள் அரசு மக்களுக்கான அரசாக இருந்தது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் குறிப்பிட்டார்.

மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள காணொளியினை சொடுக்கவும்!

Exit mobile version