மதுரை மாநாடுதான் திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகுது! – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பளீச்!

நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநாடாக அதிமுக மாநாடு இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் முனிச்சாலை பகுதியில் அதிமுக மாநாடு குறித்து மகளிரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், மாநாடு தொடர்பான ஸ்டிக்கர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்களில் ஒட்டப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநாடாக அதிமுக மாநாடு இருக்கும் என்று தெரிவித்தார்.

Exit mobile version