ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 74.79% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது நேற்றைய தினம் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 2021ல் நடைபெற்றப் பொதுத்தேர்தலில் பங்கேற்ற வாக்காளர்களை விட அதிக அளவு வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் பங்கெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 74.79% வாக்குப்பதிவு ஆகியுள்ளது. குறிப்பாக 77 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். அதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்கு இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து  வாக்குப்பதிவுக்காக 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மட்டுமே மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 945 வாக்குகள் பதிவாகியுள்ளன. 82 ஆயிரத்து 21 ஆண்கள், 87 ஆயிரத்து 907 பெண்கள் மற்றும் 17 இதர வாக்காளர்கள் இடைத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையானது வருகிற மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. தற்போது சீல் செய்த வாக்குப்பெட்டிகளை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version