"சர்கார்" படத்தின் ஹெச்டி பிரிண்ட் இன்று மாலையே வெளியிடப்படும் – தமிழ் ராக்கர்ஸ் அதிரடி

`சர்கார்’ படம் வெளியான அன்று மாலையே ஹெச்டி பிரிண்டில் இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள “சர்கார்” திரைப்படம் தீபாவளியையொட்டி நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் இன்று திரையிடப்பட்டது. கதை திருட்டு வழக்கு தொடர்பாக பல்வேறு தடைகளை கடந்து இப்படம் வெளியானது.

“சர்கார்” படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் சார்பில் தகவல் வெளியான நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம், படக்குழுவினர் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், `சர்கார்’ திரைப்படம் வெளியான அன்று மாலையே ஹெச்டி பிரிண்டில் இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் சவால் விடுத்திருப்பது படக்குழுவினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

Exit mobile version