ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரஷ்ய கலைஞர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு !

ரஷ்யாவை சேர்ந்த 15 பேர் இந்தியா- ரஷ்யா இடையேயான ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்று பயணம் செய்து அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, கோவையில் சுற்றுபயணம் செய்துவிட்டு தஞ்சாவூருக்கு வந்த ரஷ்ய கலைஞர்கள், விஜயின் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பில் விடியா திமுக ஆட்சி கவனம் செலுத்தாததால் தஞ்சை மாநகராட்சிக்கு வெளிநாட்டினர் பாடம் கற்றுத் தரும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version