ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த அனைத்து பயிர்களும் மழைநீரில் மூழ்கி நாசம் அடைந்தன. இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக வெயில் அடிக்க துவங்கிய நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் நிலையங்கள் முன்பும், சாலைகளிலும் கொட்டி வைத்து காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டதை போல, லேசான ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விடியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version