பிரபல நடிகர் சரத்பாபு மரணம்!

பிரபல நடிகர் சரத்பாபு (71) இன்று ஹைதராபாத்தில் காலமானர். உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தற்போது இயற்கை எய்தியுள்ளார். தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாலச்சந்தர் இவரை அறிமுகப்படுத்தினார். ரஜினி, கமல், விஜய் போன்றோர்களுடன் தமிழில் அதிகம் நடித்துள்ளார். ரஜினியுடன் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். விஜயுடன் புதிய கீதை என்ற திரைப்படத்தில் நடித்தார்.

சில வாரங்களுக்கு முன்பு மறைந்த நடிகர் மனோபாலா இறந்த அன்று சரத்பாபுவும் இறந்துவிட்டார் என்று ஊடகங்களில் பொய்யான தகவல் பரவியது. அந்தச் சர்ச்சை ஓய்வதற்குள் இந்நிகழ்வு உண்மையாகிவிட்டது. சரத்பாபுவின் மறைவை ஒட்டி திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version