திரைப்பட பாணியில் ஐபேடில் மறைத்து வைத்து, கடத்தி வரப்பட்ட தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு மலிண்டோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ரஷீத் உசேன் என்ற 29 வயதுடைய இளைஞர், சாம்சங் ஐபேடில் 6 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 201 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்த மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.