திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 74 லட்சம் மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து வந்த சென்னையை சேர்ந்த அசாருதீன் என்ற பயணியிடமிருந்து 188 கிராம் தங்கத்தையும், அப்துல் ஹமீது என்ற பயணியிடமிருந்து 189 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல், தேவக்கோட்டையை சேர்ந்த செல்வம் என்ற பயணிடமிருந்து 160 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து வந்த ஜாகிர் உசேன் என்பவரிடமிருந்து 546 கிராம் தங்கம், பாசூல் ஹக் என்ற பயணிடமிருந்து 532 கிராம் தங்கம் என மொத்தம் 74 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version