சென்னை விமான நிலையத்தில் சுமார் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

ஹாங்காங்கிலிருந்து சென்னை வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து 1 கோடியே  91 லட்சம் மதிப்புடைய சுமார் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பட்டியல் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தை கடத்தி வந்த சேக் குல் ஹபீஸ் என்பவரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த இவர் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version