உள்ளாடையில் வைத்து தங்கம் கடத்தல் – வந்தே பாரத் மிஷனில் நடந்த தங்கக்கடத்தல் மிஷன்

துபாயில் இருந்து வந்தே பாரத் விமானங்களில் கடத்தி வரப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து இருந்து சென்னை விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட 214 இந்தியர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துக் கொண்ட 2 பெண் பயணிகள் உள்பட 14 பேரை தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது, உள்ளாடைகளில் வைத்து மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கக்கட்டிகள் மற்றும் தங்க நகைகளை கண்டுபிடித்த அதிகாரிகள், 14 பேரிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 850 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version