சென்னை விமான நிலையத்தில் ரூ.2.27 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடியே 27  லட்ச ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கவரித்துறையினர், இது தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளனர்.

துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த முகமது அசாருதீன், ஜான் முகமது, ஜெய்லாதீன், சென்னையை சேர்ந்த முகமது மற்றும் மலேசியாவில் இருந்து வந்த சிவகங்கையை சேர்ந்த அஸ்லாம் பிகாஸ் ஆகிய 5 பேரை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு கோடியே 29 லட்ச ரூபாய் மதிப்பிலான 3 கிலோ 48 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதேபோல், துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த 3 பேரிடம் இருந்து 83 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான1 கிலோ 960 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறை அருகே இருந்த குப்பையில் கேட்பாரற்று கிடந்த 15  லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 358 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Exit mobile version