திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மூன்றுபேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பூலாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி, அமரபூண்டியை சேர்ந்த மணிகண்டன், பழனியை சேர்ந்த வீரவேல் ஆகிய மூவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.