தஞ்சாவூரில் முதலமைச்சரின் குமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில், முதலமைச்சரின் குமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. புத்தூரில் உள்ள இரண்டு வாய்க்கால்களின் மூலமாக அப்பகுதியில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், அந்த வாய்க்காலின் மதகுகளை புனரமைக்கும் பணி மற்றும் அவற்றின் அடைப்புகளை புதுப்பிக்கும் பணி, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மண் அரிப்பில் இருந்து விடுபட்டு, பாசனத்திற்கு தங்கு தடையின்றிக் தண்ணீர் கிடைக்கும் என மகிழ்ச்சி தெரிவித்த விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version